ஈரோட்டில் 2-வது நாளாக மழை


ஈரோட்டில் 2-வது நாளாக மழை
x

ஈரோட்டில் 2-வது நாளாக மழை பெய்தது

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை காலத்தை போலவே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. கடந்த 22-ந் தேதி ஈரோட்டில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அன்றைய தினம் 35 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. அதன்பிறகு தினமும் வெயில் வாட்டி வதைத்தது. ஒரு சில நாட்கள் மாலை நேரத்தில் லேசாக மழை பெய்தது.நேற்று முன்தினம் இரவு திடீரென மழை பெய்தது. இரவு 10 மணிக்கு மேல் பெய்த மழை சுமார் அரை மணிநேரம் நீடித்தது. இதேபோல் சென்னிமலை, பவானி, கொடுமுடி உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்தது. ஈரோட்டில் 2-வது நாளாக நேற்று மாலை பலத்த மழை பெய்தது. சுமார் ஒரு மணிநேரம் பெய்த மழையால் வெப்பம் தணிந்தது. மழை காரணமாக ஈரோடு பஸ் நிலையம், நாச்சியப்பா வீதி, அகில்மேடு வீதி, சம்பத்நகர், முனிசிபல்காலனி, பெரியவலசு, வீரப்பன்சத்திரம் உள்பட பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் பதிவான மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

சென்னிமலை - 16, மொடக்குறிச்சி - 13, குண்டேரிப்பள்ளம் - 12, அம்மாபேட்டை - 9.6, கொடுமுடி - 8.2, பவானி - 3, ஈரோடு - 2, பெருந்துறை -1


Related Tags :
Next Story