கடம்பூர் மலைப்பகுதியில் மழைஆடு மேய்த்து கொண்டிருந்த வாலிபர் மின்னல் தாக்கி பலி


கடம்பூர் மலைப்பகுதியில் மழைஆடு மேய்த்து கொண்டிருந்த வாலிபர் மின்னல் தாக்கி பலி
x

கடம்பூர் மலைப்பகுதியில் நேற்று இடி-மின்னலுடன் மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் ஆடு மேய்த்து கொண்டிருந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஈரோடு

டி.என்.பாளையம்

கடம்பூர் மலைப்பகுதியில் நேற்று இடி-மின்னலுடன் மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் ஆடு மேய்த்து கொண்டிருந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

வாலிபர் சாவு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் எக்கத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 26). பி.ஏ. பட்டதாரியான இவர் நேற்று காலை தனது வீடு அருகே உள்ள தோட்டத்தில் ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டி சென்றுள்ளார்.

இந்த நிலையில் ஆடுகள் மேய்ந்துவிட்டு மாலையில் வீடு திரும்பியுள்ளது. ஆனால் மூர்த்தியை காணவில்லை. இதனால் உறவினர்கள் அவரை தேடி சென்று பார்த்தனர். அப்போது மூர்த்தி அங்குள்ள ஒரு வேப்ப மரத்தின் அடியில் உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தார். இதனால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மின்னல் தாக்கியது

உடனே இதுகுறித்து கடம்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை பார்வையிட்டனர். போலீசாரின் விசாரணையில், 'கடம்பூர் மலைப்பகுதியில் நேற்று மதியம் இடி-மின்னலுடன் மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் ஆடு மேய்த்து கொண்டிருந்த மூர்த்தி மழை க்காக அருகே உள்ள வேப்ப மரத்தின் அடியில் ஒதுங்கி நின்றுள்ளார். அப்போது மின்னல் தாக்கியதில் அவர் உடல் கருகி பலியானார்' என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோக த்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story