கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழை மணலாற்றில் வெள்ளப்பெருக்கு


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழை  மணலாற்றில் வெள்ளப்பெருக்கு
x
தினத்தந்தி 15 Oct 2022 12:15 AM IST (Updated: 15 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழையால் மணலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதில் தியாகதுருகம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் நேற்று மாலை திடீரென மேகம் கருமையாக மாறியது. இதனை தொடர்ந்து இடியுடன் கூடிய மழை பெய்தது. இதில் தியாகதுருகத்தில் அரசு பள்ளிகள் விட்டதும் பல்வேறு கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தவாறு பேருந்து நிறுத்தத்திற்கு சென்று பஸ் மற்றும் ஆட்டோக்களில் ஏறி வீட்டிற்கு சென்றனர். மழையால் சாலையோரங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதேபோல் கள்ளக்குறிச்சியிலும் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.கல்வராயன் மலை பகுதியில் பெய்த மழையின் காரணமாக, மணலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தொரடிபட்டு கிராமத்தில் உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் செல்வதை படத்தில் காணலாம். இதன் காரணமாக, அந்த பகுதியில் 25 கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story