கோட்டூர் பகுதியில் மழை


கோட்டூர் பகுதியில் மழை
x

கோட்டூர் பகுதியில் சுமார் 1 மணி நேரம் மழை பெய்தது

திருவாரூர்
திருவாரூர் மாவட்டம் கோட்டூர், திருநெல்லிக்காவல், விக்கிரபாண்டியம், களப்பால், வேதபுரம், பெருகவாழ்ந்தான், வடிவாய்க்கால், திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை மழை பெய்தது. இதனால் சாலைகளிலும், தெருக்களிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவ-மாணவிகள் மழையில் நனைந்தபடியே சென்றனர். இந்த மழை நேரடி விதைப்பு செய்த குறுவை பயிர்களுக்கும், நடவு செய்த நெற் பயிர்களுக்கும் உகந்ததாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.






Next Story