மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை


மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை
x

மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை முதல் நேற்று வரை தொடர்ந்து 2 நாட்கள் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. நேற்று முன்தினம் காலையில் மட்டும் கனமழை பெய்தது. மயிலாடுதுறை, மணல்மேடு, செம்பனார்கோவில், சீர்காழி, குத்தாலம் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது. இந்த மழை காரணமாக ரோடுகளில் மழைநீர் தேங்கியது. தாழ்வான பகுதிகளையும் மழைநீர் சூழ்ந்தது. இந்த மழையின் காரணமாக தரைக்கடை வியாபாரிகள், தள்ளுவண்டிகளில் சென்று வியாபாரம் செய்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.


Next Story