ஓவேலியில் மழை: சாலை வசதி இல்லாததால் சேற்றில் சிக்கிய வாகனங்கள்- பொதுமக்கள்-வாகன ஓட்டிகள் அவதி


ஓவேலியில் மழை:  சாலை வசதி இல்லாததால் சேற்றில் சிக்கிய வாகனங்கள்- பொதுமக்கள்-வாகன ஓட்டிகள் அவதி
x

ஓவேலியில் சாலை வசதி இல்லாததால் வாகனங்கள் சேற்றில் சிக்கி விடுகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் மட்டுமின்றி அவசர காலங்களில் பொதுமக்கள் பயணம் செய்யும் வாகனங்களும் சேற்றில் சிக்கி வருகிறது.

நீலகிரி

கூடலூர்

ஓவேலியில் சாலை வசதி இல்லாததால் வாகனங்கள் சேற்றில் சிக்கி விடுகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் மட்டுமின்றி அவசர காலங்களில் பொதுமக்கள் பயணம் செய்யும் வாகனங்களும் சேற்றில் சிக்கி வருகிறது.

சாலை வசதி இல்லை

கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி பகுதியில் சட்டப்பிரிவு- 17 நிலம் உள்ளது. இதனால் அடிப்படை வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆதிவாசி கிராமங்களுக்கு உச்சநீதிமன்ற அனுமதி பெற்று அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் சாலை உள்பட எந்தவித வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை.

இதனால் பொதுமக்களுக்கு சாலை வசதி பூர்த்தி செய்யப்படவில்லை. தொடர்ந்து பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில் பேரூராட்சிக்குட்பட்ட அண்ணா நகரில் சுமார் 150 குடும்பங்கள் வசித்து வருகிறது. விவசாயிகள், கூலி தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சாலை வசதி இல்லாததால் அவசர காலங்களில் ஆஸ்பத்திரி உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.

சேற்றில் சிக்கும் வாகனங்கள்

இதனால் நோயாளிகள், கர்ப்பிணிகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதேபோல் விவசாயிகள் அறுவடை செய்யும் பச்சை தேயிலை மூட்டைகளை தினமும் ஏற்றி செல்லும் சரக்கு லாரிகள் மழைக்காலத்தில் சேற்றில் சிக்கி விடுகிறது. இதன் காரணமாக பெரும்பாலான வாகன டிரைவர்கள் அப்பகுதிக்கு வர தயக்கம் காட்டி வருகின்றனர்.

இதனால் விவசாயிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே அண்ணாநகர் பகுதியில் தார் சாலை வசதி செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இனிவரும் காலங்களில் சாலை வசதி அமைத்து தர வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.இது குறித்து அவர்கள் கூறும் போது, வனவிலங்குகள் நடமாட்டம், சாலை வசதி இன்மை உள்ளிட்ட காரணங்களால் கடும் நெருக்கடிக்கு ஆளாக நேரிடுகிறது. எனவே அதிகாரிகள் சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story