சோளிங்கரில் மழை
சோளிங்கரில் மழை பெய்தது.
ராணிப்பேட்டை
சோளிங்கர்
ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
பகல் 11.45 மணி முதல் சோளிங்கர், கல்பட்டு, சோமசமுத்திரம், பில்லாஞ்சி, மோட்டூர், எசையனுர், எரும்பி, புலிவலம், சூரை ஆயல், பாணாவரம், பழைய பாளையம், மேல் வெங்கடாபுரம், கொடைக்கல், ஐம்புகுளம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மழைபெய்யத்தொடங்கியது.
தொடர்ந்து மாலைவரை மழை பெய்தது. தொடர்ந்து மழையின் காரணமாக ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story