தொட்டியம், காட்டுப்புத்தூர் பகுதிகளில் மழை


தொட்டியம், காட்டுப்புத்தூர் பகுதிகளில் மழை
x

தொட்டியம், காட்டுப்புத்தூர் பகுதிகளில் மழை பெய்தது.

திருச்சி

தொட்டியம்:

தொட்டியம் மற்றும் காட்டுப்புத்தூர் பகுதிகளில் வெயிலின் தாக்கம் கடந்த ஒரு வாரமாக 100 டிகிரிக்கு மேல் இருந்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த சிரமப்பட்டு வந்தனர். மேலும் தொட்டியம், காட்டுப்புத்தூர் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள வாழை, வெற்றிலை மற்றும் இதர பயிர்கள் மிகவும் வாடிய நிலையில் காணப்பட்டது. இந்நிலையில் நேற்று தொட்டியம், காட்டுப்புத்தூர், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.


Related Tags :
Next Story