திண்டிவனம் பகுதியில் மழை மின்கம்பி அறுந்து விழுந்து தாய், மகன் காயம்
திண்டிவனம் பகுதியில் மழை மின்கம்பி அறுந்து விழுந்து தாய், மகன் காயமடைந்தனா்.
விழுப்புரம்
திண்வடினம்,
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியில் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில், திண்டிவனம் அருகே தென்களவாய் ஊராட்சி வைரம்பேட்டையை சேர்ந்த அரிதாஸ்(வயது 50) என்கிற விவசாயி தனது மாடுகளை, வீட்டின் அருகே உள்ள கொட்டகையில் கட்டி வைத்திருந்தார்.
மழையின் போது, காற்றும் பலமாக வீசியதால் அந்தபகுதியில் இருந்த மின்கம்பி அறுந்து விழுந்தது. இதில் கொட்டகையில் இருந்த ஒரு மாடு மீது மின்சாரம் தாக்கி பரிதாபமாக செத்து போனது.
இதற்கிடையே அங்கு வந்த, அரிதாஸ் மனைவி எழிலரசி(40), மகன் மோகன்பாபு(17) ஆகியோர் மீதும் மின்சாரம் தாக்கியது. இதில் அவர்கள் லேசான காயமடைந்தனர்.
இந்த சம்பவம் பற்றி அறிந்த திண்டிவனம் தாசில்தார் வசந்தகிருஷ்ணன் நேரில் சென்று விசாரித்தார்.
Related Tags :
Next Story