மதுரையில் விட்டு விட்டு மழை - இதமான சூழலால் மக்கள் மகிழ்ச்சி

மதுரையில் விட்டு விட்டு மழை - இதமான சூழலால் மக்கள் மகிழ்ச்சி
x

மதுரையில் நேற்று அதிகாலை முதல் மாலை வரை விட்டு விட்டு மழை பெய்தது. குளிர்ந்த காற்றுடன் இதமான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மதுரை

மதுரையில் நேற்று அதிகாலை முதல் மாலை வரை விட்டு விட்டு மழை பெய்தது. குளிர்ந்த காற்றுடன் இதமான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மதுரையில் மழை

தமிழக கடலோர மாவட்டங்களில் 2 நாட்கள் மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. அதன்தாக்கம் மதுைர மாவட்டத்திலும் எதிரொலித்தது. மதுரை மாவட்டத்தில் பரவலாக நேற்று அதிகாலையில் இருந்தே விட்டு விட்டு லேசான மழை பெய்து கொண்டே இருந்தது. மாலை வரை மதுரை நகர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்தது.

இதமான சூழல்

நகரில் பெய்த மழையின் காரணமாக வாகன ஓட்டிகள், வியாபாரிகளின் வழக்கமாக பணிகள் பாதிக்கப்பட்டன.

இதேபோல அலங்காநல்லூர், பாலமேடு, ஒத்தக்கடை, மேலூர், கருப்பாயூரணி, சிலைமான், குலமங்கலம், திருமங்கலம், பேரையூர் என பல இடங்களில் பகலில் மழை பெய்தது. உசிலம்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மேக மூட்டமாகவே வானம் இருந்தது. கடந்த சில நாட்களாக மதுரையில் பகலில் வெயில் சுட்டெரித்தது. ஆனால் நேற்று வெயில் சுவடு இன்றி, குளிர்ந்த காற்றுடன் இதமான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story