நள்ளிரவில் சென்னையை குளிர்விக்கும் மழை...!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது.
சென்னை,
தற்போது கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் அதன் தாக்கம் காரணமாக தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
சென்னையை பொறுத்தவரை இன்று மாலை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் தென்ப்பட்ட நிலையில், நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்து வருகிறது.
சென்னை பிரதான பகுதிகளான சேத்துப்பட்டு, சூளைமேடு, நெல்சன் மாணிக்கம் சாலை, நுங்கம்பாக்கம், டிடிகே சாலை, மதுரவாயல், கோயம்பேடு, அம்பத்தூர், அமைந்தகரை, வள்ளுவர் கோட்டம், தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை வளசரவாக்கம், கோடம்பாக்கம், தியாகராய நகர், மாம்பலம், போரூர், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது. சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், கூடுவாஞ்சேரி, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், பல்லாவரம், பம்மல், குன்றத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
கோடை வெப்பம் சென்னை வாசிகளை வீடுகளில் முடக்கி வைத்திருந்த நிலையில் திடீர் மழை மகிழ்ச்சி அளித்துள்ளது.