மழையால் பருத்தி சாகுபடி பாதிப்பு


மழையால் பருத்தி சாகுபடி பாதிப்பு
x

கபிஸ்தலம் அருகே பருத்தி சாகுபடி செய்த நிலத்தில் மழை நீர் வடியாததால் பருத்தி பயிர்கள் சேதமடைந்து உள்ளன. இதனால் நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர்

கபிஸ்தலம்;

கபிஸ்தலம் அருகே பருத்தி சாகுபடி செய்த நிலத்தில் மழை நீர் வடியாததால் பருத்தி பயிர்கள் சேதமடைந்து உள்ளன. இதனால் நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பருத்தி செடிகள்

தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள அண்டகுடி மற்றும் சுற்றுப்பகுதிகளில் கோடை சாகுபடியாக விவசாயிகள் பல ஏக்கர் பருத்தி பயிர்களை பயிரிட்டுள்ளனர். தற்போது செடிகள் முளைத்து வளரும் தருவாயில் உள்ளது. இந்தநிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் சாகுபடி செய்த பருத்தி நிலத்தில் மழைநீர் தேங்கியுள்ளது. மேலும் இப்பகுதியில் வடிகால் வசதி இல்லாததால் இளம் செடியாக உள்ள பருத்தி செடிகள் நிறைந்த வயல்களில் தண்ணீர் தேங்கி பருத்தி சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

நிவாரணம் வழங்க வேண்டும்

குறிப்பாக தண்ணீர் தேங்கி இருப்பதால் வேர் அழுகல் ஏற்பட்டு பருத்தி செடிகள் சோர்ந்து இலைகள் மஞ்சள் நிறமாக மாறி முற்றிலும் மகசூல் இழப்பு ஏற்படும் நிலையில் உள்ளது. விவசாயிகள் இப்பகுதியில் ஒரு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் முதல் ரூ. 35 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து பருத்தி சாகுபடியை செய்து உள்ளனர். தற்போதைய சூழ்நிலையில் மகசூல் இழப்பு மட்டுமினறி போட்ட காசை எடுக்கக்கூட முடியாத சூழ்நிலையில் விவசாயிகள் உள்ளனர்.எனவே அரசு உரிய கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட பருத்தி விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story