100-க்கு மேற்பட்ட ஏரிகளில் கணிசமான அளவு மழைநீர் சேர்ந்தது


100-க்கு மேற்பட்ட ஏரிகளில் கணிசமான அளவு மழைநீர் சேர்ந்தது
x

பூதலூர் ஒன்றிய பகுதியில் 100-க்கு மேற்பட்ட ஏரிகளில் கணிசமான அளவு மழைநீர் சேர்ந்தது.

தஞ்சாவூர்

திருக்காட்டுப்பள்ளி;

பூதலூர் ஒன்றிய பகுதியில் 100-க்கு மேற்பட்ட ஏரிகளில் கணிசமான அளவு மழைநீர் சேர்ந்தது.

கோடை வெயில்

பூதலூர் ஒன்றியத்தில் ஏரிப்பாசன பகுதி செங்கிப்பட்டி பகுதி. செங்கிப்பட்டி பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான ஏரிகளுக்கு புதிய கட்டளை மேட்டு கால்வாய் மற்றும் உய்யக்குண்டான் நீடிப்பு கால்வாய் வழியாக தண்ணீர் நிரப்பி ஒரு போக நெல் சாகுபடி நடைபெறும். மேட்டூர் அணை ஜூன் மாதம் திறக்கப்பட்டாலும் ஏரி பாசன பகுதிகளுக்கு தாமதமாக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.இந்த ஆண்டு கோடை தொடங்கியது முதல் வெயில் சுட்டெரித்தது. அக்னி நட்சத்திரம் கடந்த 4-ந் தேதி தொடங்கிய நிலையில் மேலும் வெயில் அதிகரித்து மக்களை வாட்டி வதைக்க கூடும் என்ற நிலையில், கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு தொடர்ந்து பூதலூர் ஒன்றிய பகுதியில் மழை பெய்து வருகிறது.

தண்ணீர் சோ்ந்தது

இந்த மழை காரணமாக பூதலூர் ஒன்றியத்தில் செங்கிப்பட்டி பகுதியில் உள்ள உய்யக்குண்டான் நீட்டிப்பு மற்றும் புதிய கட்டளை கால்வாய் பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட ஏரிகளில் கணிசமான அளவிற்கு நீர் சேர்ந்துள்ளது. சிலகிராம ஏரிகளில் 90 சதவீத அளவுக்கு தண்ணீர் சேர்ந்துள்ளது. பல ஏரிகளில் இருந்து தண்ணீர் வெளியே செல்லும் மதகுகள் சரியான முறையில் இல்லாததால் தண்ணீர் வீணாக வெளியேறி கொண்டுள்ளது.

தேக்கி வைக்க கோரிக்கை

மேட்டூர் அணை திறக்கப்பட்டு 4 மாதங்களுக்கு பிறகு ஏரிகளுக்கு தண்ணீர் திறக்கப்படும் நிலையில், வாராது வந்த மாமழையால் ஏரிகளில் சேர்ந்துள்ள தண்ணீரை வெளியேற்றாமல் தேக்கி வைத்து கோடை காலத்தை சிரமமின்றி கடந்து செல்லவும், நிலத்தடி நீர்மட்டத்தை சீராக வைக்கவும் நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் செங்கிப்பட்டி பகுதியில் உள்ள அனைத்து ஏரிகளையும் பார்வையிட்டு ஏரிகளின் தண்ணீரை அப்படியே பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story