தெருக்களில் தேங்கி நிற்கும் மழைநீர்


தெருக்களில் தேங்கி நிற்கும் மழைநீர்
x

பூதலூர் அருகே கோவில்பத்தில் தெருக்களில் தேங்கி நிற்கும் மழைநீரை விரைவில் அகற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர்

திருக்காட்டுப்பள்ளி;


பூதலூர் அருகே கோவில்பத்தில் தெருக்களில் தேங்கி நிற்கும் மழைநீரை விரைவில் அகற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாலையில் தேங்கிய மழைநீர்

பூதலூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்கிறது. பகல் நேரங்களில் வெயில் அடித்தாலும் இரவில் மழை பெய்கிறது. மழை காரணமாக பல தெருக்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. பூதலூர் நகரில் உள்ள சந்து தெருவில் சிறிய அளவில் மழை பெய்தாலும் பெரிய அளவில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. கோவில்பத்து ஊராட்சியில் கல்லணை கால்வாய் கரையோரம் உள்ள பாத்திமா நகர் பகுதியில் பிரதான சாலை குண்டும்- குழியுமாக உள்ளதால் மழைநீர் தேங்கி நிற்கிறது.

நடவடிக்கை

இதனால் இந்த சாலை வழியாக மக்கள் தங்கள் வீடுகளுக்கு செல்ல சேற்றில் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக 2 சக்கர வாகனங்களை ஓட்டுவதில் சிரமம் உள்ளது. இது குறித்து பலமுறை உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அனைவருக்கும் புகார்கள் அனுப்பியும் எந்தவித தீர்வும் கிடைக்கவில்லை என மக்கள் கூறுகிறார்கள்.எனவே பருவமழை தொடங்கும் சூழ்நிலையில் தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளை கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story