ஈரோட்டில் சூறைக்காற்றுடன் மழை:மின்கம்பங்கள் உடைந்து விழுந்ததால் பரபரப்பு
ஈரோட்டில் சூறைக்காற்றுடன் மழை: மின்கம்பங்கள் உடைந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது
ஈரோட்டில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. மின் கம்பங்கள் உடைந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சூறைக்காற்றுடன் பலத்த மழை
ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மாலையில் திடீரென சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. ஈரோடு அக்ரஹாரம் வீதியில் 2 மின்கம்பங்கள் உடைந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அந்த பகுதியில் மின் வினியோகம் தடைபட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் இரவு முழுவதும் மின்தடை ஏற்பட்டது. நேற்று காலையில் மின் வாரிய அதிகாரிகள் அங்கு சென்று புதிய மின்கம்பங்களை பொருத்தும் பணியில் ஈடுபட்டனர்.
விளம்பர தட்டிகள் பறந்தன
இதேபோல் ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதி, பழனிமலை வீதி, ராஜாஜிபுரம், காந்திபுரம் உள்பட பல்வேறு இடங்களில் சுமார் 3 மணிநேரம் மின் வினியோகம் தடைப்பட்டது.
ராஜாஜிபுரத்தில் ஒரு வேப்பமரம் வேரோடு சரிந்து விழுந்தது. சக்திரோடு, மேட்டூர் ரோட்டில் விளம்பர தட்டிகள் காற்றில் பறந்தன.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
எலந்தக்குட்டை மேடு- 41.2
ஈரோடு- 29
மொடக்குறிச்சி- 4.2
கோபிசெட்டிபாளையம்- 2.2