திற்பரப்பு பகுதியில் சூறைக்காற்றுடன் மழை வாழைகள் சாய்ந்தன


திற்பரப்பு பகுதியில் சூறைக்காற்றுடன் மழை வாழைகள் சாய்ந்தன
x

திற்பரப்பு பகுதியில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதில் வாழைகள் சாய்ந்தன.

கன்னியாகுமரி

குலசேகரம்:

திற்பரப்பு பகுதியில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதில் வாழைகள் சாய்ந்தன.

சூறைக்காற்றுடன் மழை

குமரி மாவட்டத்தில் அணைப் பகுதிகள் மற்றும் மலையோரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை மழைபெய்து வருகிறது. இந்த மழையின் போது இடிமின்னலும், காற்றும் வீசி வருகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில் திற்பரப்பு பகுதியில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது.

வாழைகள் சாய்ந்தன

இதில் திற்பரப்பு அருகே பெரும்ஏலா பகுதியை சேர்ந்த விவசாயிக்கு சொந்தமான வாழைத் தோட்டத்தில் இருந்த சுமார் 100 வாழைகளுக்கு மேல் சாய்ந்தன.

நேற்று காலையில் வெயில் கடுமையாக இருந்தது. பிற்பகலில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைப் பகுதிகள் மற்றும் களியல், திற்பரப்பு, குலசேகரம், திருநந்திக்கரை உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்தது. இந்த மழையால் அந்தப்பகுதியில் வெப்பத்தின் தாக்கம் குறைந்தது.


Next Story