கீரிப்பாறை பகுதியில் பலத்த காற்றுடன் மழை; ரப்பர் மரங்கள் முறிந்தன
கீரிப்பாறை பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. ரப்பர் மரங்கள் முறிந்து விழுந்தன.
அழகியபாண்டியபுரம்:
கீரிப்பாறை பகுதியில் நேற்று மாலையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இந்த மழைக்கு ஈடுகொடுக்க முடியாமல் அரசு ரப்பர் கழகத்திற்கு சொந்தமான தோட்டங்களில் இருந்த 100-க்கும் மேற்பட்ட ரப்பர் மரங்கள் முறிந்தன.
மேலும் சாலையில் மூங்கில் மரம் முறிந்து விழுந்ததில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த மழை சுமார் 1 மணி நேரம் நீடித்தது. இதனால் கோடை வெப்பம் தணிந்து இரவில் குளிர்ச்சியாக இருந்தது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire