கல்லணை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வானவில் மன்றம்; மேயர் தொடங்கி வைத்தார்


கல்லணை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வானவில் மன்றம்; மேயர் தொடங்கி வைத்தார்
x

நெல்லை டவுன் கல்லணை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வானவில் மன்றத்தை மேயர் பி.எம்.சரவணன் தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சி டவுன் கல்லணை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வானவில் மன்றம் தொடக்க விழா நடந்தது. மேயர் பி.எம்.சரவணன் தலைமை தாங்கி வானவில் மன்றத்தை தொடங்கி வைத்தார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ முன்னிலை வகித்தார்.

விழாவில் மேயர் பேசுகையில், "6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் அறிவாற்றலை வளர்க்க வேண்டும் என்பதற்காக வானவில் மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சரின் இந்த திட்டத்தை பயன்படுத்தி கல்வியில் முதன்மையாக வர வேண்டும்" என்றார்.

விழாவில் மாநகராட்சி கவுன்சிலர்கள் அனார்கலி, ரவீந்தர், மாவட்ட கல்வி அலுவலர் ஜான் பாக்கியநாதன், மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவராஜ், பள்ளி தலைமை ஆசிரியர் முத்துராஜ் மற்றும் ஸ்டீம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் கலந்துகொண்டனர்.


Next Story