மலையோர பகுதிகளில் மழை
குமரியில் மலையோர பகுதிகளில் மழை
குலசேகரம்,
குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை தீவிரமடையாமல் உள்ளது. இதனால் அணைகளில் நீர் இருப்பு குறைவாகவே உள்ளது. விவசாய நிலங்களிலும் நடவு செய்யப்பட்டுள்ள பயிர்களை காப்பாற்றி விட முடியுமா என்ற சந்தேகம் விவசாயிகள் மத்தியில் நிலவி வருகிறது.
இந்த நிலையில் மாவட்டத்தில் பல இடங்களில் கடந்த 2 நாட்களாக அதிகாலை நேரங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று அதிகாலையில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளில் கனமழை பெய்தது. இதுபோல் குலசேகரம், திற்பரப்பு, பொன்மனை மற்றும் மலையோர பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது. மதியத்திற்கு பிறகு மழை பெய்யவில்லை. வானம் மேக மூட்டத்துடனும், பலத்த காற்று வீசியவாறும் காணப்பட்டது.
மழையின் காரணமாக குலசேகரம் உள்ளிட்ட சில இடங்களில் நேற்று அதிகாலையில் ரப்பர் தோட்டங்களுக்கு தொழிலாளர்கள் பால் வடிப்பு பணிகளுக்கு செல்லவில்லை. இதனால், ரப்பர் பால்வடிப்பு பணிகள் நேற்று பாதிக்கப்பட்டது.