தாளவாடி அருகே மழை: மின்னல் தாக்கி மாடு சாவு
மாடு சாவு
ஈரோடு
தாளவாடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களிலும் பகல் நேரங்களிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் இங்குள்ள ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாய நிலங்களிலும் மழை நீர் தேங்கி நிற்கிறது. பலத்த மழையின் காரணமாக ஆங்காங்கே வீட்டின் சுவர்களும் இடிந்து விழுகிறது.
அதேபோல் நேற்று மாலை 3 மணி அளவில் தாளவாடி அருகே உள்ள திகனாரை, தொட்டகாஜனூர், அருள்வாடி, மெட்டல்வாடி, சூசைபுரம், கரளவாடி ஆகிய பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது. மாலை 4 மணி வரை சுமார் 1 மணி நேரம் இடி-மின்னலுடன் பலத்த மழையாக கொட்டியது. அப்போது திகனாரை ஜோராகாடு பகுதியை சேர்ந்த நரசிம்மன் (வயது 45) என்பவரது வீட்டு முன்பு மரத்தடியில் கட்டி வைக்கப்பட்ட பசு மாட்டை மின்னல் தாக்கியது. இதில் பசு மாடு இறந்தது.
Related Tags :
Next Story