மழைநீர் வடிகால்வாய் பணி: அயனாவரம்-கொன்னூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்


மழைநீர் வடிகால்வாய் பணி: அயனாவரம்-கொன்னூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்
x

மழைநீர் வடிகால்வாய் பணி காரணமாக அயனாவரம்-கொன்னூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

சென்னை,

சென்னை அயனாவரம் கொன்னூர் நெடுஞ்சாலையில் போர்ச்சுகீஸ் சாலை சந்திப்பில் மாநகராட்சி சார்பில் சாலையை ஆக்கிரமித்து சாலையின் குறுக்கே மழைநீர் கால்வாய் கட்டுமான பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் இன்று இரவு 11 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி வரை போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

கொன்னூர் நெடுஞ்சாலையில் மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பில் இருந்து ஐ.சி.எப் சந்திப்பு நோக்கி நேராக செல்ல அனுமதியில்லை.

அத்தகைய வாகனங்கள் கொன்னூர் ஒன் பாயிண்ட் சந்திப்பிலிருந்து ஆண்டர்சன் சாலை, இடது புறம் திரும்பி கான்ஸ்டபிள் சாலை மற்றும் போர்ச்சுகீஸ் சாலை அல்லது பள்ளி சாலை அல்லது டாக்டர் அம்பேத்கர் சாலை வழியாக கொன்னூர் நெடுஞ்சாலைக்கு செல்லலாம்.

கொன்னூர் நெடுஞ்சாலையில் ஐ.சி.எப் சந்திப்பிலிருந்து மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பை நோக்கி நேராக செல்ல அனுமதியில்லை.

அத்தகைய வாகனங்கள் ஐ.சி.எப். சந்திப்பில் இருந்து ஐ.சி.எப். அனெக்ஸ் சாலை, இடது புறம் திரும்பி நியு ஆவடி சாலை, ராஜி தெரு சந்திப்பு சிக்னல் இடது புறம் திரும்பி ராஜி தெரு – அயனாவரம் சாலை மற்றும் மேடவாக்கம் குளம் சாலை வழியாக கொன்னூர் நெடுஞ்சாலைக்கு செல்லலாம்.

இந்த நடவடிக்கைகளுக்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு தரவேண்டும்.

மேற்கண்ட தகவல் சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story