மழைநீர் வடிகால்களை சீரமைக்க வேண்டும்


மழைநீர் வடிகால்களை சீரமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 19 Sept 2022 12:15 AM IST (Updated: 19 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

திட்டச்சேரியில் மழை நீர் வடிகால்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திட்டச்சேரியில் மழை நீர் வடிகால்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மழைநீர் வடிகால்

நாகை மாவட்டம் திட்டச்சேரியில் நாகப்பட்டினம்-நன்னிலம் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலை சீரமைக்கும் பணிகள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது நடுக்கடை-பனங்குடி இடையே சாலை முழுவதும் தோண்டி எடுக்கப்பட்டு புதிய சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.இந்தநிலையில் திட்டச்சேரி பேரூராட்சிக்குட்பட்ட காந்தி சாலை, மெயின் ரோடு, கடைத்தெரு பகுதிகளில் மழைநீர் வடிவதற்கு ஏதுவாக வடிகால்கள் அமைக்கப்பட்டு இருந்தது. தற்போது புதிய சாலை அமைக்கும் பணி நடைபெறுவதால் பழைய மழை நீர் வடிகால்கள் தூர்ந்து உள்ளது. இதனால் மழைக்காலங்களில்மழை நீர் வடிய முடியாத நிலை உள்ளது.

சீரமைக்க வேண்டும்

இதுகுறித்து சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறையினரிடம் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திட்டச்சேரியில் தூர்ந்து கிடக்கும் மழைநீர் வடிகால்களை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story