மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்


மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
x

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

வேலூர்

கே.வி.குப்பம் பகுதியில் ஜல்சக்தி அபியான் திட்டம் சார்பில், மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்ரு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலம் வேப்பங்கனேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்டு, குடியாத்தம் - காட்பாடி தேசிய நெடுஞ்சாலை, பஸ் நிலையம் வழியாகச் சென்று மீண்டும் பள்ளி வளாகத்தை அடைந்தது. ஊர்வலத்தை மத்திய பாதுகாப்புத் துறை இயக்குனர் சத்திய பிரகாஷ் ஆர்யா தொடங்கி வைத்தார். வேப்பங்கனேரி ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.வி.கே.மோகன் வரவேற்றார். நாக்பூர், மத்திய நிலத்தடி நீர் மேலாண்மை செயற்பொறியாளர் கல்யாண்ஜாதவ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இ.கோபி, த.கல்பனா, மாவட்ட வேளாண்துறை துணை இயக்குனர் வெங்கடேசன், வேளாண்மைத் துறை வட்டார இயக்குனர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் பள்ளி மாணவர்கள் மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்த பதாகைகளை ஏந்தி கோஷமிட்டபடி சொன்றனர். முன்னதாக, மத்திய பாதுகாப்புத் துறை இயக்குனர் சத்திய பிரகாஷ் ஆர்யா, திருமணி பஞ்சாயத்தைச் சேர்ந்த வையாத்தூரில் அமிர்தத்துளிகள் திட்டத்தின் கீழ் புதிதாக வடிவமைக்கப்பட்ட ஏரி, கால்வாய்களில் அமைக்கப்பட்டிருந்த மழை நீர் சேகரிப்பு குழிகள், அன்னங்குடியில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் மீன் வளர்ப்பு, சொட்டு நீர் பாசனம், மாட்டுத் தீவன பயிர் வளர்ப்பு, விரிஞ்சிபுரம் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் மழைக்கால பயிர்கள் ஆகிவை குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


Next Story