ஆண்டிப்பட்டி அருகே விளை நிலங்களில் தேங்கி நிற்கும் மழைநீர்


ஆண்டிப்பட்டி அருகே விளை நிலங்களில் தேங்கி நிற்கும் மழைநீர்
x

ஆண்டிப்பட்டி அருகே விளை நிலங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் பயிர்கள் நாசமாகி வருகின்றன.

தேனி

தேனி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பலத்த மழை கொட்டித்தீர்த்தது. அப்போது ஆண்டிப்பட்டி அருகே பிராதுகாரன்பட்டி பகுதியில் உள்ள காட்டாற்று ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த தண்ணீர் விளை நிலங்களுக்குள் புகுந்தது. அப்பகுதியில் உள்ள போஸ் என்ற விவசாயியின் நிலத்தில் பயிரிட்ட மல்லிகை செடிகள், மாடுகளுக்கான பசுந்தீவனம், தென்னை போன்ற பயிர்களை வெள்ளம் சூழ்ந்தது. 2 நாட்களாக இந்த மழைநீர் வடியாததால் பயிர்கள் அழுக தொடங்கிவிட்டன.

மேலும் அப்பகுதியில் உள்ள விளை நிலங்களில் இடுப்பளவு தண்ணீர் தேங்கி நிற்கிறது. தண்ணீர் வடியாமல் உள்ளதால் மேலும் பயிர் பாதிப்பு மற்றும் விளை நிலங்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே, மழைநீரை வெளியேற்ற வழி ஏற்படுத்தவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story