பூதலூர் ரெயில்வே கீழ் பாலத்தில் தேங்கி நிற்கும் மழைநீர்


பூதலூர் ரெயில்வே கீழ் பாலத்தில் தேங்கி நிற்கும் மழைநீர்
x

பூதலூர் ரெயில்வே கீழ் பாலத்தில் தேங்கி நிற்கும் மழைநீர்

தஞ்சாவூர்

திருக்காட்டுப்பள்ளி:

பூதலூர் செங்கிப்பட்டி சாலையில் ெரயில் பாதையை கடப்பதற்காக மேம்பாலம் அமைக்கப்பட்டது. மக்களின் தேவையை பூர்த்தி செய்ய கீழ் பாலம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த கீழ் பாலத்தின் வழியாக பூதலூர் பிரதான நகரிலிருந்து நாச்சியார்பட்டி, ஜெகன்மோகன் நகர், செக்கடி தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்கள் இரண்டு சக்கர வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களிலும், நடந்தும் செல்வதற்கு வசதியாக இருந்தது.

கீழ் பாலத்தில் மழை பெய்யும் போது சேரும் தேங்கும் தண்ணீரை அப்புறப்படுத்த கீழ் பாலத்தின் அருகிலேயே மின்சார மோட்டார் ஒன்று அமைக்கப்பட்டு அதன் மூலம் தேங்கும் தண்ணீரை அப்புறப்படுத்த வசதி செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதும் முறையாக தண்ணீரை முழுவதுமாக இறைத்து அகற்றப்படுவது இல்லை. இதனால் கீழ் பாலத்தில் பல நாட்கள் மழைநீர் தேங்கி நிற்கும் அவலம் உள்ளது. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு பெய்த மழையால் பூதலூர் ெரயில்வே கீழ்பாலத்தில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அந்த பாலத்தின் வழியாக செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே பூதலூர் ரெ யில்வே கீழ் பாலத்தில் தேங்கி கிடக்கும் மழைநீரை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story