உப்பளங்களில் தேங்கிய மழைநீர்


உப்பளங்களில் தேங்கிய மழைநீர்
x

முள்ளக்காடு, முத்தையாபுரம் பகுதிகளில் உப்பளங்களில் மழைநீர் தேங்கியது.

தூத்துக்குடி

ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு, முத்தையாபுரம், அத்திமரப்பட்டி, ஸ்பிக்நகர், எம்.சவேரியார் புரம், பொட்டல் காடு பகுதியில் நேற்று முன்தினம் சுமார் ஒரு மணி நேரம் பரவலாக மழை பெய்தது. இதனால் தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில், முத்தையாபுரம், ஸ்பிக்நகரில் சாலையோர தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மேலும் முள்ளக்காடு, முத்தையாபுரம் பகுதியில் பெய்த மழையினால் உப்பு உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. உப்பளங்களில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது.

இதுகுறித்து உப்பு உற்பத்தியாளர்கள் கூறும்போது, உப்பளப் பகுதியில் பரவலாக மழை பெய்துள்ளதால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய உப்பு உற்பத்தி செய்வதற்கு இன்னும் ஒரு வார காலம் ஆகும். இதனால் உப்பள தொழிலாளர்கள் ஒரு வாரம் வேலை வாய்ப்பு இழந்து உள்ளனர் என்றனர். அத்திமரப்பட்டியில் பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.


Next Story