குடியிருப்புகளை சூழ்ந்து நிற்கும் மழைநீர்


குடியிருப்புகளை சூழ்ந்து நிற்கும் மழைநீர்
x

ராஜபாளையத்தில் குடியிருப்புகளை சூழ்ந்து மழைநீர் நிற்பதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையத்தில் குடியிருப்புகளை சூழ்ந்து மழைநீர் நிற்பதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

பரவலாக மழை

ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றுமுன்தினம் பரவலாக மழை பெய்தது. மேலப்பாட்ட கரிசல்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட மதுரை வீரன் காலனி பகுதியில் போதுமான மழை நீர் வடிகால் வசதி இல்லை. ஆதலால் நேற்று முன்தினம் பெய்த மழை காரணமாக, தண்ணீர் வெளியேற வசதி இல்லாததால் வீடுகளை சுற்றி தேங்கி நிற்கிறது.

அப்பகுதி தாழ்வான இடத்தில் அமைந்துள்ளதால் 3 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறி செல்லும் பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்

சில நேரங்களில் முட்புதர்களில் இருந்து பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் மழை நீருடன் கலந்து வீடுகளுக்குள் புகுந்து விடுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

மழை காரணமாக இந்த பகுதியில் உள்ள காளியம்மாள் என்பவரது வீட்டின் உள்புற சுவர் இடிந்து விழுந்தது. இதேபோல அருகே உள்ள அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள சில தெருக்களில் இதுவரை கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தப்படவில்லை. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்களும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

வீடுகளுக்கு மத்தியில் தேங்கி உள்ள மழை நீரை அகற்றி, போதுமான வடிகால் வசதி செய்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story