வி.கே.புரம் நகராட்சியில் குடிநீர் வரியை உயர்த்தி தீர்மானம் நிறைவேற்றம் -அ.தி.மு.க. கவுன்சிலர்கள் போராட்டம்

வி.கே.புரம் நகராட்சியில் குடிநீர் வரியை உயர்த்தி தீர்மானம் நிறைவேற்றம் -அ.தி.மு.க. கவுன்சிலர்கள் போராட்டம்
x

விக்கிரமசிங்கபுரம் நகராட்சி கூட்டத்தில் குடிநீர் வரியை உயர்த்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் நகராட்சி கூட்டத்தில் குடிநீர் வரியை உயர்த்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடிநீர் வரி உயர்வு

விக்கிரமசிங்கபுரம் நகராட்சி சாதாரண கூட்டம் நேற்று நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. நகராட்சி தலைவர் உள்பட 7 கவுன்சிலர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். அ.தி.மு.க.வை சேர்ந்த 3 கவுன்சிலர்களும், தி.மு.க.வை சேர்ந்த 11 கவுன்சிலர்களும் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.

இந்த கூட்டத்தில் குடிநீர் வரி மாதத்துக்கு ரூ.50 என்று இருந்ததை 3 மடங்கு உயர்த்தி அதாவது ரூ.150 ஆக அதிகரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் பல்வேறு தீ்ர்மானங்களும் நிைறவேற்றப்பட்டன.

போராட்டம்

குடிநீர் வரியை உயர்த்தி தீர்மானம் வைக்கப்பட்டதாலும், தங்களது வார்டுகளில் அடிப்படை வசதிகள் செய்து தரவில்ைல என்று கூறியும் 14 கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததாக கூறப்படுகிறது.

மேலும் குடிநீர் வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கிறாஸ் இமாக்குலேட், வைகுண்ட லட்சுமி, பாஸ்கர் ஆகிய 3 பேரும் நகராட்சி அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் கூறுகையில், 'எங்களது வார்டு பகுதி மக்களுக்கு உரிய நிதி ஒதுக்க வேண்டும். குடிநீர் வரியை உயர்த்தக்கூடாது. பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வேண்டும்' என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story