8 ரெயில்களில் கூடுதலாக 1 படுக்கை வசதி பெட்டி இணைப்பு
திருப்பூர்:
மங்களூரு-சென்னை செல்லும் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (எண்.22638) நேற்று முதல் கூடுதலாக 1 படுக்கை வசதி பெட்டி இணைக்கப்பட்டுள்ளது. இதுபோல் சென்னை-மங்களூரு செல்லும் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (எண்.22637) வருகிற 4-ந் தேதி முதல் 1 படுக்கை வசதி பெட்டி இணைக்கப்படும். சென்னை-மங்களூரு செல்லும் ரெயிலில் (எண்.12601) இன்று (வியாழக்கிழமை) முதல் கூடுதலாக 1 படுக்கை வசதி பெட்டி இணைக்கப்படுகிறது.
அதுபோல் மங்களூரு-சென்னை செல்லும் ரெயிலில் (எண்.12602) நாளை (வெள்ளிக்கிழமை) முதல் கூடுதலாக 1 படுக்கை வசதி பெட்டி இணைக்கப்படும். திருவனந்தபுரம்-சாலிமர் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் (எண்.22641) இன்று முதலும், சாலிமர்-திருவனந்தபுரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் (எண்.22642) வருகிற 5-ந் தேதி முதலும் 1 படுக்கை வசதி பெட்டி இணைக்கப்படுகிறது.
கன்னியாகுமரி-ஸ்ரீமாதா வைஷ்ணவ் தேவி கட்ரா வாராந்திர ரெயிலில் (எண்.16317) நாளை முதலும், ஸ்ரீமாதா வைஷ்ணவ் தேவி கட்ரா-கன்னியாகுமரி வராந்திர ரெயிலில் (எண்.16318) வருகிற 6-ந் தேதி முதலும் 1 படுக்கை வசதி பெட்டி கூடுதலாக இணைக்கப்படுகிறது. மேற்கண்ட 8 ரெயில்களிலும் நிரந்தரமாக 1 படுக்கை வசதி பெட்டி கூடுதலாக இணைக்கப்படுகிறது.இந்த ரெயில்கள் போத்தனூர், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக இயக்கப்படுகிறது. இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.