கவுன்சிலர்களுடன் ராஜகுமார் எம்.எல்.ஏ. கலந்தாய்வு
கவுன்சிலர்களுடன் ராஜகுமார் எம்.எல்.ஏ. கலந்தாய்வு
மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் பேரூராட்சி அனைத்து வார்டு உறுப்பினர்களுடன் எஸ்.ராஜகுமார் எம்.எல்.ஏ. கலந்தாய்வு செய்தார். இதில் பேரூராட்சி அனைத்து வார்டுகளுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை கேட்டறிந்து அவற்றை கோரிக்கை மனுவாக உறுப்பினர்களிடம் பெற்றார். இதில் பேரூராட்சி செயல் அலுவலர் ரஞ்சித், காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலாளர் ஜம்புகென்னடி, நகர தலைவர் சூர்யா, ஒன்றியக்குழு உறுப்பினர் வடவீரபாண்டியன், தி.மு.க. பேரூர் துணை செயலாளர் சட்ட செந்தில், இளநிலை உதவியாளர் சுந்தர், பேரூர் மாணவரணி அமைப்பாளர் தினேஷ் மற்றும் பேரூராட்சி அனைத்து வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story