திருச்சி சரக ஊர்க்காவல் படை உதவி தளபதியாக ராஜன் பொறுப்பேற்பு
திருச்சி சரக ஊர்க்காவல் படை உதவி தளபதியாக ராஜன் பொறுப்பேற்றுக்கொண்டார்.
அரியலூர்
திருச்சி சரக ஊர்க்காவல் படை உதவி தளபதியாக ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த ராஜன் பொறுப்பேற்றுக்கொண்டார். இதனையடுத்து ஊர்க்காவல் படையின் தலைமை இயக்குனர் ரவியை சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. கார்த்திகேயன், மத்திய மண்டல டி.ஐ.ஜி. சரவணசுந்தர், திருச்சி மாநகர கமிஷனர் சத்தியபிரியா, திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் ஆகியோர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும் திருச்சி சரக ஊர்க்காவல் படை உதவி தளபதியாக பொறுப்பேற்றுக்கொண்ட ராஜனுக்கு, லயன்ஸ் மாவட்ட ஆளுநர் இமயவரம்பன் மற்றும் ஜெயங்கொண்டம் சோழன் நகர் லயன் சங்க நிர்வாகிகள், ஊர் காவல் படை அலுவலர்கள், காவல்துறையினர் வாழ்த்து தெரிவித்தனர்.
Related Tags :
Next Story