ராஜபாளையம் நகராட்சி கூட்டம்


ராஜபாளையம் நகராட்சி கூட்டம்
x

ராஜபாளையம் நகராட்சி கூட்டம்

விருதுநகர்

ராஜபாளையம்

ராஜபாளையம் நகராட்சி கூட்ட அரங்கில் சாதாரண கூட்டம் தலைவர் பவித்ரா ஷியாம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் துணைத் தலைவர் கல்பனா குழந்தை வேலு, ஆணையாளர் பார்த்தசாரதி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். மேலும் வரவு செலவு உள்ளிட்ட 83 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தின் போது வார்டு கவுன்சிலர்கள் கூறியதாவது, 18-வது வார்டை சேர்ந்த மருதுபாண்டி நகரில் 183 வீடுகளுக்கு இதுவரை தாமிரபரணி கூட்டு குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை எனவும், தெரு நாய்கள் அதிகரித்துள்ளதால் மக்கள் வீதிகளில் அச்சத்துடன் நடமாடும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் புகார் தெரிவித்தனர். மேலும் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சொத்து வரியை குறைக்கவும் உறுப்பினர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

18-வது வார்டில் விடுபட்ட தெருவின் ஒரு பகுதி ரெயில்வே துறையின் கீழ் வருவதால் உரிய அனுமதியுடன் குடிநீர் குழாய் பதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தெரு நாய்களை கட்டுப்படுத்தவும், சொத்து வரியை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம் தெரிவித்தார்.


Next Story