ராஜராஜ சோழன் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவிப்பு - ஜி.கே.வாசன் வரவேற்பு
ராஜராஜ சோழன் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்ததற்கு ஜி.கே.வாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
சென்னை,
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு, தஞ்சாவூர் பெரியகோவிலை கட்டிய மாமன்னர் ராஜராஜசோழனின் பிறந்தநாளான சதய விழா இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவித்ததை த.மா.கா சார்பில் வரவேற்கிறோம்.
ராஜராஜசோழனின் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்பட வேண்டும் என்ற ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட மக்களின் நீண்ட கால எண்ணம் நிறைவேறும் வகையில் தமிழக அரசின் அறிவிப்பு அமைந்துள்ளது. இரண்டு நாள் நடைபெறும் சதய விழா கோலாகலமாக, சிறப்புடன் நடைபெற்று மன்னர் ராஜராஜசோழனுக்கு புகழ் சேர்த்து, தஞ்சை மண்ணுக்கு மென்மேலும் பெருமை சேர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story