தூத்துக்குடி விமான நிலைய புதிய இயக்குனராக ராஜேஷ் பொறுப்பேற்பு


தூத்துக்குடி விமான நிலைய புதிய இயக்குனராக ராஜேஷ் பொறுப்பேற்பு
x
தினத்தந்தி 23 May 2023 12:15 AM IST (Updated: 23 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய இயக்குனராக ஆர்.ராஜேஷ் பொறுப்பேற்றுக் கொண்டார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி விமான நிலையத்தின் இயக்குனராக பணியாற்றி வந்த சிவபிரதாத், திருப்பதி விமான நிலையத்துக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்தில் வணிகப் பிரிவு தலைவராக பணியாற்றி வந்த ஆர்.ராஜேஷ் பதவி உயர்வு பெற்று, தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய இயக்குனராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வந்து பொறுப்பேற்றுக் கொண்டார். அவரிடம் பணியிட மாறுதலாகி செல்லும் சிவபிரசாத் பொறுப்புகளை ஒப்படைத்தார். அப்போது தூத்துக்குடி விமான நிலைய மேலாளர் எஸ்.ஜெயராமன், கம்யூனிகேஷன் பிரிவு தலைவர் பிரிட்டோ உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய இயக்குனராக பொறுப்பேற்றுள்ள ராஜேஷின் சொந்த ஊர் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் ஆகும். இவர் இதற்கு முன்பு திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் வணிகப்பிரிவு தலைவராகவும், டெல்லியில் உள்ள இந்திய விமான நிலையங்கள் ஆணைய தலைமை அலுவலகத்தில் வணிகப்பிரிவு அதிகாரியாகவும் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story