ரஜினி ரசிகர்கள் கண்டன சுவரொட்டியால் பரபரப்பு


ரஜினி ரசிகர்கள் கண்டன சுவரொட்டியால் பரபரப்பு
x

ஆந்திர மந்திரிகள் விமர்சனம் செய்ததை கண்டித்து, ரஜினி ரசிகர்கள் கண்டன சுவரொட்டி ஒட்டியதால் திண்டுக்கல்லில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல்

ஆந்திராவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்னாள் முதல்-மந்திரி என்.டி.ராமராவ் பிறந்தநாள் விழா நடந்தது. இதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசுகையில், முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவின் நடவடிக்கையால் ஆந்திரா வளர்ச்சி பெற்றுள்ளதாக கூறினார். இதனை விமர்சனம் செய்து ஆந்திர மந்திரிகள் பேசி இருந்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்து திண்டுக்கல்லில் ரஜினி ரசிகர்கள் சுவரொட்டிகளை ஒட்டி இருக்கின்றனர்.

அந்த சுவரொட்டியில், எங்களின் உயிரினும் மேலான தலைவரின் குணத்தை ஜெகன்மோகன் ரெட்டியின் அமைச்சர்கள் விமர்சிப்பதை வன்மையாக கண்டிக்கிறோம், அண்ணாத்த குரூப்ஸ்-திண்டுக்கல் மாவட்டம் என்று அச்சிடப்பட்டு இருக்கிறது. திண்டுக்கல்லில் ரஜினிகாந்தின் ரசிகர்கள் அடிக்கடி பரபரப்பாக சுவரொட்டி ஓட்டுவது அவ்வப்போது நடக்கிறது. இந்தநிலையில் ஆந்திர மந்திரிகளை கண்டித்து ஓட்டிய சுவரொட்டி மேலும் பரபரப்பை உண்டாக்கியது.


Next Story