ராஜீவ்காந்தி நினைவு நாள்; ராகுல்காந்தி வருகை ரத்து


ராஜீவ்காந்தி நினைவு நாள்; ராகுல்காந்தி வருகை ரத்து
x

ராஜீவ்காந்தி நினைவு நாள் ராகுல்காந்தி வருகை ரத்து.

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் ஊடகத்துறை தலைவர் ஆ.கோபண்ணா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தியின் 32-வது ஆண்டு நினைவுதினத்தையொட்டி, ஸ்ரீபெரும்புதூரில் 21-ந் தேதி (இன்று) ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி அளவில் நடைபெறும் அஞ்சலி நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தவிர்க்க முடியாத காரணத்தால் அவரது வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.

ராஜீவ்காந்தி நினைவிடத்தில் கே.எஸ்.அழகிரி தலைமையில் காலை 8 மணி அளவில் மலர் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து காலை 10.30 மணி அளவில் சைதாப்பேட்டை சின்னமலையில் அமைந்துள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்படுகிறது. பின்னர், காலை 11 மணி அளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் ராஜீவ்காந்தியின் உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story