ஓசூர் வந்த ராஜீவ் ஜோதிக்கு காங்கிரஸ் கட்சியினர் வரவேற்பு
ஓசூர்
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 79-வது பிறந்த நாளையொட்டியும், தீவிரவாத எதிர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், "ராஜீவ் ஜோதி சத்பவனா யாத்திரை கமிட்டி" சார்பில் அதன் தலைவர் துரை தலைமையில் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து டெல்லிக்கு ராஜீவ் ஜோதி கொண்டு செல்லப்படுகிறது.
ராஜீவ் காந்திக்கு அஞ்சலி செலுத்து வகையில் இந்த நிகழ்வு நடைபெற்று வருகிறது. நேற்று ஸ்ரீபெரும்புதூரில் தொடங்கிய இந்த ராஜீவ் ஜோதி யாத்திரை ஓசூரை வந்தடைந்தது. ஓசூர் சீதாராம் மேடு பகுதியில், ராஜீவ் ஜோதிக்கு, மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன் தலைமையில் நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.
இதில், ஐ.என்.டி.யு.சி. தேசிய செயலாளர் குப்புசாமி, மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் மாதேஷ், மாநகர தலைவர் தியாகராஜன், துணைத்தலைவர் சிவப்ப ரெட்டி, ஐ.என் டி.யு.சி. நிர்வாகிகள் காளிமுத்து, நாராயணன், ராஜி, வெள்ளைச்சாமி, மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் எர்ஷாத், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி சரோஜா மற்றும் கட்சியினரும், யாத்திரை கமிட்டியை சேர்ந்த கிஷோர் பிரசாத், கோமதீசன், ரால்ப்ரோ, சீனிவாசப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர். வரவேற்பு நிகழ்ச்சிக்கு பின்னர், பெங்களூரு நோக்கி ஜோதி கொண்டு செல்லப்பட்டது.
தேச ஒற்றுமை, அமைதி மதச்சார்பின்மை ஆகியவற்றை வலியுறுத்தி நடத்தப்படும் இந்த ஜோதி யாத்திரை, பல்வேறு மாநிலங்களை கடந்து வருகிற 20-ந் தேதி டெல்லி சென்றடைகிறது. ராஜீவ் காந்தி பிறந்த நாளான அன்று, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியாகாந்தி, ராகுல் காந்தி ஆகியோரிடம் ஜோதியை ஒப்படைக்க உள்ளதாக கமிட்டி தலைவர் துரை தெரிவித்தார்.