திருக்கடையூரில் ரேக்ளா பந்தயம்
3 ஆண்டுகளுக்கு பிறகு திருக்கடையூரில் ரேக்ளா பந்தயம் நிர்வாக குழுவினர் அறிவிப்பு
திருக்கடையூர்:
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் பொங்கல் பண்டிகையையொட்டி மாடு, குதிரை ரேக்ளா பந்தயம் நடைபெறுவது வழக்கம்.கோர்ட்டு தடை விதித்ததால் கடந்த 3 ஆண்டுகளாக ரேக்ளா பந்தயம் நடைபெறவில்லை. இந்த நிலையில் தடை நீக்கி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து 3 ஆண்டுகளுக்கு பிறகு கானும் பொங்கல் அன்று ரேக்ளா பந்தயம் நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் திருக்கடையூரில் நடந்தது. கூட்டத்திற்கு ரேக்ளா பந்தய நிர்வாகி பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார், ஒன்றியக்குழு துணை தலைவர் பாஸ்கரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிம்சன், டீ.மணல்மேடு துரைராஜன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். ஊராட்சி மன்றதலைவர் ஜெயமாலதி சிவராஜ் வரவேற்றார். கூட்டத்தில் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பிறகு நிர்வாக குழுவினர் கூறியதாவது:- கோர்ட்டு தடையை நீக்கி உள்ளதால் 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு ரேக்ளா பந்தயம் நடத்தப்படும். விழாவிற்கு எம்.பி, எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு விடுக்கப்படும். ரேக்ளா பந்தயம் நடத்துவதற்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அமுர்த விஜயகுமார் தலைமையில் 30 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது என்றனர்.