பரமத்திவேலூரில் மஞ்சப்பை பயன்பாடு விழிப்புணர்வு ஊர்வலம்


பரமத்திவேலூரில் மஞ்சப்பை பயன்பாடு விழிப்புணர்வு ஊர்வலம்
x

பரமத்திவேலூரில் மஞ்சப்பை பயன்பாடு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

நாமக்கல்

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூரில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி வேலூர் அரிமா சங்கம் மற்றும் பரமத்தி அருகே உள்ள தனியார் கல்லூரி சார்பில் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பரமத்திவேலூர் பஞ்சமுக விநாயகர் கோவில் முன்பு பேரூராட்சி தலைவர் லட்சுமி ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நெடுஞ்செழியன், அரிமா சங்கம் கண்ணன், மோகன் மற்றும் தனியார் கல்லூரி தளாளர் கணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலம் பரமத்திவேலூரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பஞ்சமுக விநாயகர் கோவில் முன்பு நிறைவடைந்தது. ஊர்வலத்தின் போது சுற்றுச்சூழலை காப்பது குறித்தும், பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து மீண்டும் மஞ்சப்பைகளை பயன்படுத்துவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பின்னர் வாரச்சந்தை, மீன் மார்க்கெட், கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு இலவசமாக மஞ்சப்பை வினியோகம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


Next Story