திருச்செங்கோட்டில் போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்
திருச்செங்கோட்டில் போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
நாமக்கல்
எலச்சிபாளையம்:
திருச்செங்கோடு குமாரமங்கலத்தில் சர்வதேச போதை ஒழிப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதனை நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு போதை ஒழிப்பு விழிப்புணர்வு வாசகனங்கள் அடங்கிய பதாகைகளை கையில் பிடித்தபடி சென்றனர். பஸ் நிறுத்தத்தில் தொடங்கிய இந்த ஊர்வலம் பிரிவு ரோடு வரை சென்று முடிந்தது. இதில் திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், ஊரக போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன், விவேகானந்தா கல்லூரி முதல்வர் சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story