சுதந்திர தின பவள விழா பாத யாத்திரை


சுதந்திர தின பவள விழா பாத யாத்திரை
x

சுதந்திர தின பவள விழா பாத யாத்திரை நடந்தது.

நாகப்பட்டினம்

75-வது சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு நாகை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பாத யாத்திரை தொடங்கியது. நாகை அபிராமி அம்மன் திருவாசலில் உள்ள மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து, பாத யாத்திரை புறப்பட்டது. நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் நகர தலைவர் உதயச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் தஸ்லீம், மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல் காதர், மாணவர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் கோபி, கீழையூர் வட்டார துணைத்தலைவர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் அமிர்தராஜா, காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, பாத யாத்திரையை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் கலந்து கொண்டவர்கள் தேசியகொடியை ஏந்தி சென்றனர்.


Next Story