பரமத்திவேலூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்


பரமத்திவேலூரில்  சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
x

பரமத்திவேலூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

நாமக்கல்

பரமத்திவேலூரில்:

இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு பரமத்திவேலூர் அருகே உள்ள பி.ஜி.பி. கல்வி நிறுவனங்கள் சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்்தது. பரமத்திவேலூரில் உள்ள மோகனூர் பிரிவு சாலை பகுதியில் தொடங்கிய ஊர்வலத்தை வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக அவர் சாலை பாதுகாப்பு, போதை பொருள் தடுப்பு நடவடிக்கை குறித்து மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட ஊர்வலம் பஸ் நிலையம், பள்ளி சாலை, நான்கு சாலை, பழைய பைபாஸ் ரோடு வழியாக சென்று 3 ரோடு சந்திப்பில் நிறைவடைந்தது. இந்த ஊர்வலத்தில் சாலை பாதுகாப்பு, ஹெல்மட் அணிவதன் அவசியம், சாலை விதிகளை பின்பற்றுதல் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியும், கோஷங்களை எழுப்பியும், துண்டு பிரசுரங்களை வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


Next Story