நாமக்கல்லில் செவ்வாடை பக்தர்களின் கஞ்சிகலய ஊர்வலம்


நாமக்கல்லில்  செவ்வாடை பக்தர்களின் கஞ்சிகலய ஊர்வலம்
x

நாமக்கல்லில் செவ்வாடை பக்தர்களின் கஞ்சிகலய ஊர்வலம்

நாமக்கல்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் 8-ம் ஆண்டு ஆடிப்பூர விழா நேற்று நாமக்கல்லில் நடந்தது. உலக சமாதானம், மத நல்லிணக்கம் பெருகவும், பருவமழை பெய்ய வேண்டியும், மக்கள் நலம் பெறவும் செவ்வாடை பக்தர்களின் கஞ்சிகலய ஊர்வலம் நடந்தது. நாமக்கல் மாவட்ட ஆன்மிக இயக்க தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். அக்ரி வெங்கடாஜலம் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். நாமக்கல் தட்டார தெருவில் தொடங்கிய கஞ்சிகலய ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தை அடைந்தது.

இதில் ஏராளமான செவ்வாடை பக்தர்கள் கஞ்சிக்கலயம், முளைப்பாலி, அக்னி சட்டி எடுத்துக்கொண்டு ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை வழிபாட்டு மன்ற தலைவர் சேகர், செயலாளர் பொன்னுசாமி உள்ளிட்டோர் செய்திருந்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story