கிருஷ்ணகிரியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்-கலெக்டர் தொடங்கி வைத்தார்


கிருஷ்ணகிரியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்-கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

ஊர்வலம்

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் சர்வதேச நீலவான தூய காற்று தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஊர்வலத்தில் இயற்கையை நேசிப்போம், இனியாவது திருந்துவோம், வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம், தூய்மையான காற்றை சுவாசிப்போம், செல்போன் சூடாவதை பார்த்து கவலைப்படும் நாம் பூமி சூடாவதை எண்ணி கவலைப்படுவது இல்லை. இயற்கையை நேசித்து, இயற்கையுடன் வாழ வேண்டும் என யோசிப்போம்.

விழிப்புணர்வு

ஓசோனில் ஓட்டை நமக்கெல்லாம் வெட்கை. மரங்கள் வளர்ப்போம் ஓசோன் காப்போம் என்பன போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

இந்த ஊர்வலம் புதிய பஸ் நிலையத்தில் தொடங்கி பழையபேட்டை டி.பி.ரோடு, காந்தி ரோடு வழியாக புதுப்பேட்டை ஐந்து ரோடு பகுதியில் நிறைவடைந்தது. இந்த ஊர்வலத்தில் மாவட்ட சுற்று சூழல் பொறியாளர் வெங்கடேசன், உதவி சுற்றுசூழல் பொறியாளர் சுமித்ராபாய், உதவி பொறியாளர்கள் ரங்கசாமி, தீனதயாளன், வினோதினி, தாசில்தார் சம்பத் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story