1009 பால்குடம் ஊர்வலம்
1009 பால்குடம் ஊர்வலம் நடந்தது.
முதுகுளத்தூரில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி விழா மற்றும் 60-வது குருபூஜை விழாவை முன்னிட்டு முதுகுளத்தூர் ஆப்பநாடு மறவர் சங்கம் சார்பாக 1009 பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் இளைய சேதுபதி மன்னர் நாகேந்திர சேதுபதி மற்றும் ஆப்பநாடு மறவர் சங்க தலைவர் தூரி முனியசாமி ஆகியோர் தலைமை தாங்கி பால்குட ஊர்வலத்தை தொடங்கி வைத் தனர். ஊர்வலமானது முதுகுளத்தூர் தேவர் மகால் அருகில் உள்ள முருகன் கோவிலில் இருந்து முக்கிய வீதி வழியாக பஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள தேவர் சிலையை அடைந்தது. பின்னர் தேவர் சிலைக்கு பாலபிஷேகம் விழா நடைபெற்றது. முன்னதாக முதுகுளத்தூர் பஸ் நிலையத்தில் உள்ள தேவர் சிலைக்கு சிவாச்சாரியாரின் வேத மந்திரங்கள் முழங்க யாக பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியில் முதுகுளத்தூர், தூரி, ஆப்ப னூர், இளஞ்செம்பூர், புளியங்குடி, கிடாத்திருக்கை, இலந்தை குளம், ஏனாதி, ஒருவானேந்தல், காத்தாகுளம் மானாங்கரை, தூவல் கிழவனேரி, வெண்கல குறிச்சி, காஞ்சிரங்குளம், சித்திரங்குடி உள்ளிட்ட கிராம பகுதியில் இருந்து ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.