மத்திய அரசை கண்டித்து நாகையில் விவசாயிகள் டிராக்டர் ஊர்வலம்
மத்திய அரசை கண்டித்து நாகையில் விவசாயிகள் டிராக்டர் ஊர்வலம் நடந்தது.
நாகையில் ஐக்கிய விவசாயிகளின் முன்னணி சார்பில் டிராக்டர் ஊர்வலம் நடந்தது. இதற்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட தலைவர் பாபுஜி தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் சிவகுரு பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாகை மாலி எம்.எல்.ஏ., விவசாய சங்க மாவட்ட தலைவர் சரபோஜி, மாநில துணைத் தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். விவசாய சங்க ஒன்றிய செயலாளர் குமார் நன்றி கூறினார். விவசாயிகளுக்கு எதிரான சட்ட திருத்தங்களை மத்திய அரசு கொண்டுவரக் கூடாது. சட்டபூர்வ குறைந்தபட்ச ஆதார விலையில் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். முழுமையான பயனுள்ள பயிர் காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு கொண்டுவரும் சட்ட திருத்தங்களை கண்டித்தும் ஊர்வலத்தில் சென்றவர்கள் கோலஷம் எழுப்பினர்.