சத்துணவு ஊழியர்கள் கவன ஈர்ப்பு பேரணி


சத்துணவு ஊழியர்கள் கவன ஈர்ப்பு பேரணி
x

சத்துணவு ஊழியர்கள் கவன ஈர்ப்பு பேரணி

திருப்பூர்

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு பேரணி நேற்று மாலை திருப்பூர் பல்லடம் ரோடு தென்னம்பாளையத்தில் இருந்து தொடங்கியது. மாவட்ட தலைவர் சந்திரகலா தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ராஜஸ்ரீ வரவேற்றார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கரன் பேரணியை தொடங்கி வைத்தார்.

சமையலர், சமையல் உதவியாளர்களுக்கு கல்வி தகுதி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். பணியிடமாறுதல் கோரியை ஊரியர்களுக்கு பணியிட மாறுதல் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். காலை சிற்றுண்டி உணவு வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலமாக அரசு ஏற்று நடத்த வேண்டும். ஜாக்டோ ஜியோ போராட்ட காலத்தில் பிடித்தம் செய்த ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணியாக சென்றார்கள்.

பேரணி கலெக்டர் அலுவலகம் முன் நிறைவடைந்தது. பின்னர் அங்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோரிக்கைகள் குறித்து மாவட்ட செயலாளர் நாகராஜன் பேசினார். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில துணை தலைவர் குப்புசாமி, மாவட்ட பொருளாளர் மகேந்திரபூபதி உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story