குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த பேரணி


குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த பேரணி
x
தினத்தந்தி 30 Oct 2022 12:15 AM IST (Updated: 30 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்றது. இதற்கு கூட்டமைப்பு தலைவர் ரவிகுமார் தலைமை தாங்கினார். கோத்தகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பஸ் நிலையத்தில் புறப்பட்ட பேரணி மார்க்கெட் திடல், காமராஜர் சதுக்கம், ராம்சந்த் சதுக்கம் வழியாக காந்தி மைதானத்தை சென்றடைந்தது. பேரணியில் மாணவ-மாணவிகள் குழந்தைகள் மற்றும் வளரிளம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், மார்பக புற்றுநோய் குறித்தும் விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர். தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்வது குறித்தும், அவர்களுக்காக 24 மணி நேரமும் செயல்படும் கட்டணமில்லா இலவச தொலைபேசி எண்கள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. மேலும் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ் மற்றும் மாணவ-மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story