ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கோரி காளைகளுடன் இளைஞர்கள் ஊர்வலம்


ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கோரி காளைகளுடன் இளைஞர்கள் ஊர்வலம்
x

நிலக்கோட்டை அருகே, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கோரி காளைகளுடன் இளைஞர்கள் ஊர்வலம் சென்றனர்.

திண்டுக்கல்

நிலக்கோட்டை அருகே, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கோரி காளைகளுடன் இளைஞர்கள் ஊர்வலம் சென்றனர்.

ஜல்லிக்கட்டு

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள மைக்கேல்பாளையத்தில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். ஆனால் 2006-ம் ஆண்டுக்கு பிறகு மைக்கேல்பாளையத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இதனால் ஜல்லிக்கட்டு நடத்த கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்தனர். ஆனால் இதுவரை அனுமதி கிடைக்கவில்லை.

நிலக்கோட்டை தாலுகாவை பொறுத்தவரை சுமார் 800 ஜல்லிக்கட்டு காளைகள் உள்ளன. இதனால் இந்த ஆண்டு மைக்கேல்பாளையத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று காளை வளர்ப்போர் மற்றும் மாடுபிடி வீரர்கள், கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வரு கின்றனர்.

காளைகளுடன் ஊர்வலம்

இந்தநிலையில் மைக்கேல்பாளையத்தில், பொங்கல் பண்டிகையன்று ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி மைக்கேல்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள், சுமார் 50-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளுடன் நேற்று முன்தினம் ஊர்வலம் சென்றனர்.

மைக்கேல்பாளையம் மெயின் ரோட்டில் இருந்து மேளதாளத்துடன் ஊர்வலம் தொடங்கியது. அப்போது இளைஞர்கள் ஆட்டம், பாட்டத்துடன் முக்கிய வீதிகள் வழியாக காளைகளுடன் ஊர்வலமாக சென்றனர். பின்னர் அங்குள்ள மைக்கேல் அதிதூதர் ஆலயத்திற்கு காளைகளை அழைத்துச்சென்றனர். அங்கு பாதிரியார் சேவியர்ராஜ் காளைகளுக்கு ஆசி வழங்கினார். அப்போது ஒரு காளை, முன்னங்கால்களை மண்டியிட்டபடி நன்றி தெரிவித்த காட்சி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.


Related Tags :
Next Story