ராமர் கோவில் குளத்தை தூர்வார வேண்டும்


ராமர் கோவில் குளத்தை தூர்வார வேண்டும்
x

திருத்துறைப்பூண்டி ராமர் கோவில் குளத்தை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

கோட்டூர்:

திருத்துறைப்பூண்டி ராமர் கோவில் குளத்தை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமர் கோவில் குளம்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பழைய பஸ் நிலையம் ராமர் கோவில் அருகே ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் குளம் உள்ளது. இந்த குளம் பிறவி மருந்தீஸ்வரர் கோவில் நிர்வாகத்தின் சார்பில் பராமரிக்க ப்படுகிறது. இந்த குளம் 20 ஆண்டுகளுக்கு முன் புனித தீர்த்தமாவும், இப்பகுதி மக்கள் எந்த காலத்திலும் அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்தக்கூடிய மிக முக்கியமான குளமாகவும் இருந்தது.

இந்த குளத்தில் தண்ணீர் அதிகம் இருக்கும் போது தான் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் கைப்பம்புகளுக்கு தண்ணீர் வரும். தற்போது இந்த குளம் பராமரிக்கப் படாததால் ஆகாயத்தாமரை மற்றும் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது.

கொசு உற்பத்தி

மேலும் குளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள குப்பைகள் இந்த குளத்தில் கொட்டப்படுகின்றன. இதனால் இந்த தண்ணீர் கழிவுநீராக மாறி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இதிலிருந்து கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீா்கேடு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

இந்த குளம் தூர்வாரப்படாததால் நிலத்தடி நீர் குறைந்து இங்கு உள்ள குடிநீர் கைப்பம்புகளில் கோடை காலங்களில் தண்ணீர் வருவதில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த கோவில் குளத்தை சுத்தம் செய்து, பொது மக்கள் பயன்படுத்தும் வகையில் சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தூர்வார கோரிக்கை

இது குறித்து திருத்துறைப்பூண்டியை சேர்ந்த ஆனந்தன் கூறியதாவது:-

திருத்துறைப்பூண்டி ராமர் கோவில் குளத்து நீரை பல ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது இந்த குளத்தில் சிலர் குப்பைகளை கொட்டி உள்ளனர். மேலும் குளம் முழுவதும் ஆகாயத்தாமரை செடிகள் மண்டி காட்சி அளிக்கிறது. குளத்தை முறையாக பராமரிக்காததால் குளம் தற்போது விஷ ஜந்துக்களின் வசிப்பிடமாக காட்சி அளிக்கிறது.

குளத்தை தூர்வாாி சுத்தம் செய்து முைறயாக பராமரித்தால் திருத்துறைப்பூண்டி பகுதியில் உள்ள மக்கள் பயன்பெறுவாா்கள். குறிப்பாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து அனைத்து தரப்பு மக்களுக்கும் உபயோகமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறடினாா்.


Next Story